மங்களாசாசனம் |
பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், திருப்பாணாழ்வார் |
தலச்சிறப்பு |
எம்பெருமானின் பரத்வம் விளங்குமிடம். பூவுலகில் உள்ள 106 திவ்யதேசங்களையும் ஸேவித்தவர்களை அவர்கள் பரமம் அடைந்தபின், பகவானே அவர்களை திருப்பாற்கடல் திவ்யதேசத்திற்கு அழைத்துச் சென்று ஸேவை சாதித்து, வைகுண்டத்தில் அவர்களின் நிரந்தர வாசஸ்தலமாக்குகின்றான் என்பது நம்பிக்கை. இது வைணவர்களின் லக்ஷ்யமான மோக்ஷ நிலையாகும்.
மூலவர் பரமபதநாதன் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்த திருக்கோலம், தெற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு பெரிய பிராட்டியார் என்பது திருநாமம். கருடன், விஷ்வக்ஸேனன், முக்தர்கள் ஆகியோருக்கு பகவான் ப்ரத்யக்ஷம்.
பெரியாழ்வார் 4, ஆண்டாள் 1, திருமங்கையாழ்வார் 1, நம்மாழ்வார் 24, திருமழிசையாழ்வார் 2, பொய்கையாழ்வார் 2, பேயாழ்வார் 1, திருப்பாணாழ்வார் 1, ஆக மொத்தம் 36 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
|